/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பாசி பயறு விதைப் பண்ணை: வேளாண் துணை இயக்குனர் ஆய்வு
/
பாசி பயறு விதைப் பண்ணை: வேளாண் துணை இயக்குனர் ஆய்வு
பாசி பயறு விதைப் பண்ணை: வேளாண் துணை இயக்குனர் ஆய்வு
பாசி பயறு விதைப் பண்ணை: வேளாண் துணை இயக்குனர் ஆய்வு
ADDED : பிப் 13, 2024 05:14 AM

வானுார்: வானுார் அடுத்த வி.கேணிப்பட்டு கிராமத்தில் பலமுறை பூத்து காய்க்கும் புதிய ரகமான வம்பன் 4 ரக பாசி பயறு விதைப் பண்ணையைமாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் 48 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் பயறு வகைகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாகஉளுந்து மற்றும் பனிப்பயர் அதிகளவில் விவசாயிகள் சாகுபடி செய்யப்படுகிறது.
மேலும் பாசி பயறு மிகக் குறைந்த அளவிலான பரப்பிலேயே சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இந்த பாசி பயறு சாகுபடி பரப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் நடப்பு ஆண்டு புதிய ரகமான வம்பன்-4 வல்லுநர் விதை 20 கிலோ, தமிழ்நாடுவேளாண்மை பல்கலைக்கழகத்தில் இருந்து பெறப்பட்டு, வானுார் தாலுகாவில் வி.கேணிப்பட்டு கிராமத்தில் விவசாயி செந்தில்நிலத்தில் 2.5 ஏக்கர் பரப்பளவில் விதைப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விதைப்பண்ணையை ஆய்வு செய்த மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் பெரியசாமி கூறுகையில், 'இந்த ரகமானது 2019ம் ஆண்டுவெளியிடப்பட்டது. பலமுறை பூத்து காய்க்கும் திறன் கொண்டது. மஞ்சள் தேமல் நோய்க்கு மிதமான எதிர்ப்பு தன்மை கொண்டுள்ளது.எக்டேருக்கு 1,250 கிலோ மகசூல் தரக்கூடியது.
தற்சமயம் காய்க்கும் பருவத்தில் நன்றாக வளர்ச்சி உள்ளது. இதிலிருந்து அதிக மகசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது' என்றார்.
ஆய்வின் போது, வானுார் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் எத்திராஜ், உதவி வேளாண்மை அலுவலர் பஞ்சநாதன் உடனிருந்தனர்.