/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புயல் வௌ்ளம் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்து மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் கோரிக்கை

ADDED : டிச 09, 2024 04:58 AM
விழுப்புரம் : 'தமிழகத்தில் பெஞ்சல் புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்து, மாநில அரசு கோரிய முழு நிதியை மத்திய அரசு சு வழங்க வேண்டும்' என அகில இந்திய விவசாயிகள் சங்க குழு வலியுறுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில், பெஞ்சல் புயல் கனமழை பாதிக்கப்பட்ட பகுதிகளை, டெல்லியிலிருந்து வந்த அகில இந்திய விவசாயிகள் சங்க நிதி செயலர் கிருஷ்ணபிரசாத், இணைச் செயலர்கள் சாகர், ரவீந்திரன், மாநில பொருளாளர் பெருமாள் உள்ளிட்ட குழுவினர் நேற்று பார்வையிட்டனர்.
அதனைத் தொடர்ந்து, அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:
விழுப்புரம் மாவட்டத்தில், புயல், கனமழை வெள்ளத்தால் மிகப்பெரியளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதே போல், கடலுார் உள்ளிட்ட 14 மாவட்டங்களில், 6 லட்சம் எக்டர் பயிர்களும், அதில் 3 லட்சம் எக்டர் நெல்லும், உளுந்து 80 ஆயிரம் எக்டர் உளுந்து பயிர்களும், 80 ஆயிரம் எக்டர் தோட்டப் பயிர்களும், பாதித்துள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் 180 ஏரிகள் உடைந்து, ஊருக்குள் புகுந்துள்ளது.
இந்த வெள்ளத்தால் சிறு, குறு விவசாயிகள் தான் பாதித்துள்ளனர். சிதைந்த நிலங்களை, விவசாயிகள் பல லட்சம் செலவு செய்து சீரமைக்க முடியாது. வேளாண் பொறியியல் துறை மூலம் சீரமைத்து தர வேண்டும். தமிழக அரசு அறிவித்த பயிர் இழப்பீடு நிவாரணம் போதாது. ஒரு ஏக்கர் நெல் பயிரிட 36 ஆயிரம் ரூபாய் செலவாகுமென வேளாண் குழுவே தெரிவித்துள்ளது. ஆனால், இழப்பீடு 6,000 ரூபாய் அறிவித்தது மிக குறைவாகும்.
அனைத்து தரப்பு பாதிப்புகளையும், இன்னும் முழுமையாக கணக்கிட்டு, அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.
பெஞ்சல் புயல் பாதித்த பகுதிகளை தேசிய பேரிடராக அறிவித்து, தமிழக அரசு கோரிய 6,600 கோடி ரூபாயை, மத்திய அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.