/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அகில இந்திய எஸ்.சி., - எஸ்.டி., ரயில்வே தொழிற்சங்க செயற்குழு
/
அகில இந்திய எஸ்.சி., - எஸ்.டி., ரயில்வே தொழிற்சங்க செயற்குழு
அகில இந்திய எஸ்.சி., - எஸ்.டி., ரயில்வே தொழிற்சங்க செயற்குழு
அகில இந்திய எஸ்.சி., - எஸ்.டி., ரயில்வே தொழிற்சங்க செயற்குழு
ADDED : ஜூலை 10, 2025 09:49 PM

விழுப்புரம்; அகில இந்திய எஸ்.சி., - எஸ்.டி., ரயில்வே தொழிற்சங்கம் சார்பில், நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.
விழுப்புரம் கிளை அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, தலைவர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார். பொருளாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.
தெற்கு மண்டல அமைப்பு செயலாளர் இருசப்பன் பேசினார். ஓபன் லைன் தலைவர் வீரமணி, அமைப்பு செயலாளர் கவுதமி, துணை தலைவர் மூர்த்தி, உதவி செயலாளர் ராமமூர்த்தி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
முன்னதாக, செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில் நடந்த விபத்தில் இறந்த மாணவ, மாணவியர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
விபத்தில் காயமடைந்த பூரண குணமடைய வேண்டும். அனைத்து ரயில்வே கேட்களிலும் சி.சி.டி.வி., கேமராக்கள் ரயில்வே நிர்வாகம் பொருத்த வேண்டும்.
பொதுமக்கள் ரயில்வே சட்டங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
உதவி செயலாளர் மணிமேகலை நன்றி கூறினார்.