/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அனைத்துக்கட்சி கூட்டம்: அ.தி.மு.க., புறக்கணிப்பு
/
அனைத்துக்கட்சி கூட்டம்: அ.தி.மு.க., புறக்கணிப்பு
ADDED : செப் 24, 2025 06:16 AM

விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், அரசியல் கட்சிகள், சங்கங்கள் மற்றும் அமைப்புகள் சார்பில் நடத்தப்படும் பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், தெருமுனை பிரசாரங்கள் தொடர்பாக அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார்.
அவர் பேசியதாவது:
மாவட்டத்தில் பொதுக்கூட்டம் நடத்தப்படுவதற்கான தேர்வு செய்யப்பட்ட இடம் குறித்த வி வரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, மாவட்டத்தை பொருத்தவரை, 28 போலீஸ் நிலைய எல்லைகளில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களுக்கு, 38 இடங்களும், 26 போலீஸ் நிலைய எல்லைகளில் பொதுக்கூட்டங்களுக்கு 43 இடங்களும், 31போலீஸ் ஸ்டேஷன் எல்லைகளில் தெருமுனை கூட்டங்களுக்கு 94 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும், 31 போலீஸ் நிலைய எல்லைகளிலும் ஊர்வல பாதை இல்லை என தெரிவிக்கப்படு கிறது. இந்த விவரங்கள் வருவாய் துறை, காவல் துறை போன்ற பல்வேறு துறை அலுவலர்களிடமிருந்து ஆய்வு செய்து, இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் ஒருவார காலத்திற்குள் தொடர்புடைய போலீஸ் ஸ்டேஷனில் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது, எஸ்.பி., சரவணன், திண்டிவனம் சப் கலெக்டர் ஆகாஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜூ, ஆர்.டி.ஓ., முருகேசன் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்ட னர்.