/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாற்றுக் கட்சியினர் பா.ஜ.,வில் ஐக்கியம்
/
மாற்றுக் கட்சியினர் பா.ஜ.,வில் ஐக்கியம்
ADDED : ஜன 29, 2024 06:45 AM

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் பகுதியைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் 400க்கும் மேற்பட்டோர் விழுப்புரத்தில் நடந்த 'என் மண்; என் மக்கள்' யாத்திரை நிகழ்ச்சியில் பா.ஜ.,வில் இணைந்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்துள்ள ஏமப்பூர், சிறுவானுார், ஏனாதிமங்கலம், செம்மார், கண்ணாரம்பட்டு, கொங்கராயனுார், காந்திநகர், பையூர், கப்பூர் உள்ளிட்ட கிராம பகுதியில் உள்ள மாற்றுக் கட்சியினர் 400க்கும் மேற்பட்டோர், நேற்று முன்தினம் விழுப்புரத்தில் நடந்த 'என் மண்; என் மக்கள்' யாத்திரை நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தனர்.
முன்னதாக மாவட்ட துணைத் தலைவர் வேலு தலைமையில் மாலை அணிவித்து சிறப்பு வரவேற்பு அளித்தனர்.