/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தெய்வானை மகளிர் கல்லுாரியில் முன்னாள் மாணவிகள் சொற்பொழிவு
/
தெய்வானை மகளிர் கல்லுாரியில் முன்னாள் மாணவிகள் சொற்பொழிவு
தெய்வானை மகளிர் கல்லுாரியில் முன்னாள் மாணவிகள் சொற்பொழிவு
தெய்வானை மகளிர் கல்லுாரியில் முன்னாள் மாணவிகள் சொற்பொழிவு
ADDED : டிச 27, 2025 05:56 AM

விழுப்புரம்: விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் முன்னாள் மாணவிகள் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.
முதுகலை மற்றும் ஆங்கில ஆராய்ச்சி துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில், சென்னை, எஸ்.பி.ஐ., வங்கி நிர்வாக அதிகாரி அச்சயா, தொழில் தயாரிப்பு மற்றும் வேலை வாய்ப்பு பாதைகள் தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.
வங்கிகள் மற்றும் அதன் தொடர்புடைய நிதி நிறுவனங்களில் உள்ள தொழில் வாய்ப்புகள் பற்றியும், வங்கி துறையில் வெற்றி பெற தேவையான வேலை வாய்ப்பு திறன்கள், தொழில்முறை திறமை பற்றி கூறினார்.
மேலும், வங்கி துறையின் தொடர்புடைய போட்டி தேர்வுகள், அதற்கு தயாராகும் முறைகள் பற்றியும் தெரிவித்தார்.
முன்னதாக, ஆங்கில துறை உதவி பேராசியர் கவுரி வரவேற்றார். இதில், 85 மாணவிகள் பங்கேற்றனர். உதவி பேராசிரியை ஜான்சி நன்றி கூறினார்.