/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வி.ஆர்.எஸ்., கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
/
வி.ஆர்.எஸ்., கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
வி.ஆர்.எஸ்., கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
வி.ஆர்.எஸ்., கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ADDED : ஜன 15, 2024 06:22 AM

விழுப்புரம் : அரசூர் வி.ஆர்.எஸ்., பொறியியல் கல்லுாரியில் 2023ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் அன்பழகன் தலைமை தாங்கினார். சரவணன் முன்னிலை வகித்தார்.
துணை பேராசிரியர் பரிதி இளம்வழுதி, முன்னாள் மாணவர்கள் சந்திப்பு அறிக்கையை வாசித்தார்.
நிகழ்ச்சியில், பங்கேற்ற முன்னாள் மாணவர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்ததோடு, வருங்கால வி.ஆர்.எஸ்., கல்லுாரி மாணவர்களின் கல்வி, தொழிற்திறனை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை கூறினர்.
மாணவர்களின் தன்னம்பிக்கையை மேம்படுத்தும் வகையில், அவர்களுக்கு தேவைப்படும் செயல்வடிவ தொழில்நுட்ப திறனை வளர்த்து வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதாக உறுதியளித்தனர்.
தொடர்ந்து, 2023-24ம் ஆண்டிற்கான முன்னாள் மாணவர் அமைப்பு தலைவராக ஜெயப்பிரகாஷ், துணைத் தலைவராக பாலாஜி, சென்னை சரக மாணவர் பிரதிநிதி வாசுதேவன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
நிகழ்ச்சியில், பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து முன்னாள் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் பங்கேற்றனர்.
துணை பேராசிரியர் குறளன்பன் நன்றி கூறினார்.