ADDED : ஆக 23, 2026 05:51 PM
அ நிறம் | அளவு
செஞ்சி: செஞ்சி அடுத்த மேல்ஒலக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2012ம் ஆண்டு பிளஸ் 2 பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் தங்களுக்கு கல்வி கற்று கொடுத்த ஆசிரியர்களுக்கு சந்தன மாலை அணிவித்து, ஊர்வலமாக அழைத்து வந்து மரியாதை செலுத்தி, நினைவு பரிசு வழங்கினர். தற்போது பயிலும் 250 மாணவ, மாணவிகளுக்கு பிரியாணி விருந்தளித்தனர்.
ஆசிரியர்களின் பெருமை குறித்து மாணவர்கள் பாடல் பாடியும், பழைய நினைவுகளையும், தற்போதைய நிலையையும் பகிர்ந்து கொண்டனர்.
மேலும், பள்ளிக்குத் தேவையான குடிநீர் தொட்டி, குடிநீர் சுத்திகரிப்பு கருவி, பெயர் பலகை மற்றும் கழிவறை வசதிகளை செய்து கொடுத்தனர்.
