ADDED : செப் 08, 2026 05:15 AM

திண்டிவனம்: திண்டிவனம் புனித அன்னாள் பள்ளியில் 30 ஆண்டுகளுக்கு முன் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
திண்டிவனம் புனித அன்னாள் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினத்தையொட் டி, கடந்த 1996ம் ஆண்டு பிளஸ் 2 கணிதம், உயிரியியல் பாடப்பிரிவு மாணவர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜான் போஸ்கோ தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் கனகராஜ் வரவேற்றார். முன்னாள் ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
விழாவில் பள்ளிக்கு கல்வி உபகரணங்களுக்காக 2 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
விழாவில் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள் தங்கள் பழைய நினைவுகளை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டனர்.
ஒருங்கிணைப்பாளர் புகழேந்தி நன்றி கூறினார்.
