ADDED : ஆக 25, 2025 11:14 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்:
ஒலக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2003-2005ம் ஆண்டு 10ம் வகுப்பிலிருந்து பிளஸ் 2 வரையில் படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, ஒன்றிய கவுன்சிலர் ஞானவேல் தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமையாசிரியர் பழனிவேல் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், பங்கேற்ற பள்ளியை சேர்ந்த முன்னாள் ஆசிரியர்களுக்கு, மாணவர்கள் சார்பில் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினர்.
மேலும், பள்ளிக்கு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை வசதி செய்து கொடுத்தனர். மாணவர்கள் தங்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.