ADDED : ஜன 07, 2026 05:44 AM

அவலுார்பேட்டை: மேல்மலையனுார் அடுத்த அவலுார்பேட்டையில் 1977-78ம் ஆண்டில் அரசு உயர்நிலைப் பள்ளியாக இருந்த போது 10ம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவ, மாணவிகளின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
மதியழகன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் பன்னீர் செல்வம் வாழ்த்தி பேசினார். வாசுதேவன், சலாவுதீன், ஷாகத், அண்ணாமலை, ராமலிங்கம் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஒன்றிய சேர்மன் அன்பழகன், ஒன்றிய கவுன்சிலர் ஷாகின்அர்ஷத், ஊராட்சி தலைவர் செல்வம், முன்னாள் தலைவர்கள் கலா ராஜவேலாயுதம், பழனி, ஜெயக்குமார், கணபதி, விக்கிரமாதித்தன், விஜயட்சுமி, உதயராணி, கிருஷ்ணவேணி உட்பட பலர் பங்கேற்றனர்.
முன்னாள் மாணவர்கள் சார்பில் ஆசிரியர்கள் புருஷோத்தமன், கோவிந்தசாமி, சிதம்பரநாதன், முனுசாமி, துரைசாமி ஆகியோரை கவுரவித்து நினைவு பரிசும், பள்ளிக்கு பீரோவும் வழங்கினர்.
தொடர்ந்து பள்ளி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

