ADDED : பிப் 02, 2026 04:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே சங்கீதமங்கலம் அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
இப்பள்ளியில் கடந்த 1979ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி., படித்த மாணவர்கள் சார்பில் நடந்த 'மீண்டும் பள்ளிக்கு போகலாம்' சந்திப்பு நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் எட்வின், மேலாண்மைக் குழு தலைவி சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் வேளாண் இணை இயக்குநர் சண்முகம் வரவேற்றார்.
பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் ராஜசேகர், ஆசிரியர் ஆரோக்கியசாமி ஆகியோரை முன்னாள் மாணவர்கள் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினர்.
ஓய்வு பெற்ற பி.டி.ஓ., பாஸ்கரன், ஓய்வு பெற்ற ஆசிரியர் ராமநாதன் மற்றும் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் குடும்பத்தினரோடு பங்கேற்றனர்.

