தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

 முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

 முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி


ADDED : மார் 04, 2026 05:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2026 05:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கீழே வைக்கவும்...: திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

இக்கல்லுாரியில் கடந்த 2008ம் ஆண்டு படித்த அனைத்து துறை மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு, பா.ம.க., கவுரத தலைவர் மணி எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் முருகன் வரவேற்றார். பா.ம.க., செயல் தலைவர் ஸ்ரீகாந்தி பரசுராமன் சிறப்புரையாற்றினார்.

அறங்காவலர் குழு உறுப்பினர் சிவப்பிரகாசம், கல்லுாரி முதல்வர் வீரமுத்து, முதன்மை நிர்வாக அலுவலர் சிவக்குமார், நிர்வாக அலுவலர் சிவா, பெற்றோர் ஆசிரியர் கழக ஒருங்கிணைப்பாளர் தண்டபாணி வாழ்த்தி பேசினர். முன்னாள் மாணவர்கள் சார்பில் கல்லுாரிக்கு கணினி பொருட்கள் வழங்கப்பட்டது.

விழாவில் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள் தங்களின் கல்லுாரி கால நினைவுகளை பரிமாறிக்கொண்டனர். வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் ஜீவா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us