/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆசிரியர்களை ஊர்வலமாய் அழைத்து வந்து கவுரவப்படுத்திய முன்னாள் மாணவர்கள் அசத்தல் படித்த பள்ளிக்கு ரூ.1.85 லட்சம் உதவி வழங்கல்

ADDED : ஜன 07, 2025 06:28 AM

செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 1993-1995ம் ஆண்டில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படித்த முன்னாள் மாணவர்கள் 30 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு நிகழ்ச்சி நடத்தினர். இதே நேரத்தில் பள்ளியின் 50வது ஆண்டு நிறைவு அடைந்து பொன் விழாவிற்கு தயாராகி வருகின்றது.
இந்த பேட்ச்சில் படித்த மாணவர்கள் பலரும் பல்வேறு துறைகளில் பணி புரிந்து வருகின்றனர். பொருளாதார அளவிலும் நல்ல நிலையில் உள்ளனர். இவர்கள், மாணவர் சந்திப்பை மட்டும் செய்யாமல் பொன் விழா காணும் பள்ளிக்கு எதேனும் செய்ய முடிவு செய்தனர்.
இதன்படி பள்ளியில் 25வது சுதந்திர தினத்தின் போது அமைத்திருந்த அரசியலமைப்பு சட்டத்தின் நினைவு துாண், மணிக்கூண்டு ஆகியவறை்ற ரூ.1.50 லட்சம் மதிப்பில் செப்பணிட்டு புதுப்பித்தனர். பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ் மூலம் கணினியில் பாடம் நடத்த ரூ.35 ஆயிரம் மதிப்பில் புரஜெக்டர் ஒன்றை அன்பளிப்பாக வழங்கி உள்ளனர்.
விழா துவங்குவதற்கு முன்னதாக கல்வியில் உயர்த்திய ஆசிரியர்களை பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் உயரமான இடத்தில் உட்கார வைத்து மாலை அணிவித்து, தாசில்தார் அலுவலகத்தில் இருந்து பள்ளிவரை ஒரு கி.மீ., துாரத்திற்கு மேள, தாளங்களுடன் ஊர்வலமாக அழைத்து வந்தனர். பள்ளியில் நடந்த விழாவில் ஆசிரியர்களுக்கு பாதை பூஜை செய்து, பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசு வழங்கி ஆசி பெற்றனர்.
இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். முன்னாள் மாணவர் ஒருங்கிணைப்பாளர் பழனி வரவேற்றார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் சிங்காரம், அரிதாஸ், உதயகுமார், ஆசிரியர்கள் திருநாவுக்கரசு, கிருஷ்ணன், குலசேகரன், குமாரசாமி, உதவி தலைமை ஆசிரியர் ராமசாமி, என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் ஏழுமலை, ஒருங்கிணைப்பாளர்கள் வடிவேல், அய்யனார், வேலாயுதம், ஐயப்பன், ரஹீம் பேக், ஸ்ரீஏழுமலை, சுப்ரமணியன் மற்றும் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ப.ஏழுமலை, சந்திரசேகரன் தொகுத்து வழங்கினர்.
தீபம் ஏழுமலை நன்றி கூறினார்.