/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அ.ம.மு.க., நிர்வாக அமைப்பு மாற்றம்
/
அ.ம.மு.க., நிர்வாக அமைப்பு மாற்றம்
ADDED : நவ 05, 2024 06:40 AM
விழுப்புரம்; விழுப்புரம் மாவட்ட அ.ம.மு.க., நிர்வாக அமைப்பு நிர்வாக ரீதியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அ.ம.மு.க., பொதுச்செயலர் டி.டி.வி.தினகரன் அறிக்கை: ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட அ.ம.மு.க., நிர்வாக வசதிக்காக மாற்றியமைக்கப்படுகிறது. அதன்படி, விழுப்புரம் கிழக்கு மாவட்டத்தில் வானூர், , மயிலம் சட்டமன்ற தொகுதியும், வடக்கு மாவட்டத்தில் திண்டிவனம், செஞ்சி சட்டமன்ற தொகுதியும், . தெற்கு மாவட்டத்தில் விக்கிரவாண்டி, விழுப்புரம் சட்டசபை தொகுதியும் அடங்கும்.
விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலர் பொறுப்பில் கோவிந்தராஜிம், வடக்கு மாவட்ட செயலர் பொறுப்பில் முத்துவும், தெற்கு மாவட்ட செயலர் பொறுப்பில் மணிகண்டனும் நியமிக்கப்படுகின்றனர் என்று, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

