/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வானுாரில் அ.ம.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை
/
வானுாரில் அ.ம.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை
ADDED : ஜூலை 08, 2025 11:42 PM

விழுப்புரம்; வானுாரில் அ.ம.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வானுார் அ.ம.மு.க., ஒன்றிய அலுவலகம், திருச்சிற்றம்பலம் கூட்டு சாலையில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். மாநில வர்த்தக அணி துணை தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் டேவிட் பிரவீன்குமார் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய செயலாளர்கள் கதிர்வேல், அண்ணாதுரை, அருணகிரி கண்ணா, செல்வகுமார், ரங்கநாதன், வாஞ்சிநாதன், சுகுமார், சிவக்குமார், சக்திவேல், எத்திராஜ், வல்லம் சக்திவேல், ஸ்ரீராமுலு, செந்தில்குமார், அணி செயலாளர்கள் பிரபு, மோகன், கண்ணன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதில், வரும் 13ம் தேதி விழுப்புரம் கிழக்கு மாவட்ட அ.ம.மு.க., தலைமை அலுவலகத்தை திறந்து வைக்க பொதுச் செயலாளர் தினகரன் வரவுள்ளதையொட்டி, வரவேற்பு மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாக செய்வது பற்றி ஆலோசிக்கப்பட்டது.