/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கடலில் குளித்த முதியவர் நெஞ்சுவலியால் சாவு
/
கடலில் குளித்த முதியவர் நெஞ்சுவலியால் சாவு
ADDED : ஜன 22, 2024 12:23 AM
மரக்காணம்- கோட்டக்குப்பம் அடுத்த தந்திராயன்குப்பம் கடலில் குளித்த ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த முதியவர் நெஞ்சுவலியால் இறந்தார்.
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த வேக்கர், 60; இவரது மனைவி ஐடி. இருவரும் கடந்த 18ம் தேதி புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனர்.
பின் புதுச்சேரியில் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு, கோட்டக்குப்பம் அடுத்த தந்திராயன்குப்பன் கடற்கரையில் உள்ள விடுதியில் தங்கினர்.
நேற்று முன்தினம் மாலை வேக்கர், ஐடி இருவரும் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது வேக்கருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடன், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார்.
இது குறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.