/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஸ்ரீரங்கபூபதி நர்சிங் கல்லுாரியில் உடற்கூறியல் கண்காட்சி
/
ஸ்ரீரங்கபூபதி நர்சிங் கல்லுாரியில் உடற்கூறியல் கண்காட்சி
ஸ்ரீரங்கபூபதி நர்சிங் கல்லுாரியில் உடற்கூறியல் கண்காட்சி
ஸ்ரீரங்கபூபதி நர்சிங் கல்லுாரியில் உடற்கூறியல் கண்காட்சி
ADDED : ஜன 13, 2024 03:36 AM

செஞ்சி : செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி நர்சிங் கல்லுாரியில் முதலாம் ஆண்டு டிப்ளமோ நர்சிங், பி.எஸ்சி., நர்சிங், ஏ.என்.எம்., மாணவர்கள் சார்பில் உடற்கூறியல் கண்காட்சி நடந்தது.
கல்லுாரி செயலாளர் ஸ்ரீபதி கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார். கல்லுாரி முதல்வர் மேனகா காந்தி முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் பிரியங்கா வரவேற்றார். கல்லுாரி முதல்வர்கள் மணிகண்டன், கோவிந்தராஜ், சசிகுமார், செந்தில், பேராசிரியர்கள் ஜான்சி, கார்த்திகா, கலைப்பிரியா, தனலட்சுமி, கஸ்துாரி, கோசலை, அருணா பங்கேற்றனர்.
கண்காட்சியில் உடலின் ஒவ்வொரு பாகங்கங்களின் செயல்பாடு, அதன் பயன் குறித்து பார்வையாளர்களுக்கு விளக்கப்பட்டது.