/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம், விக்கிரவாண்டியில் அன்புமணி இன்று பிரசாரம்
/
விழுப்புரம், விக்கிரவாண்டியில் அன்புமணி இன்று பிரசாரம்
விழுப்புரம், விக்கிரவாண்டியில் அன்புமணி இன்று பிரசாரம்
விழுப்புரம், விக்கிரவாண்டியில் அன்புமணி இன்று பிரசாரம்
ADDED : ஆக 12, 2025 11:24 PM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் பா.ம.க., தலைவர் அன்புமணி, இன்று பிரசார பயணம் செய்கிறார்.
வடக்கு மாவட்ட பா.ம.க., செயலாளர் சிவக்குமார் எம்.எல்.ஏ., அறிக்கை:
பா.ம.க.,வின் 36ம் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு, கட்சியின் தலைவர் அன்புமணி தலைமையில், கடந்த மாதம் 25ம் தேதி, தமிழக மக்களின் உரிமை மீட்பு பயணம் துவங்கியது. தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில், தலைவர் அன்புமணி இன்று பிரசார பயணம் மேற்கொள்கிறார்.
விழுப்புரம் மாவட்ட பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கம் சார்பில், கூட்டேரிப்பட்டில், இன்று காலை 11:00 மணிக்கு, அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
மாலை 5:00 மணிக்கு விக்கிரவாண்டியிலும், இரவு 7:00 மணிக்கு விழுப்புரம் காந்தி சிலை அருகிலும், 'உரிமை மீட்க தலைமுறை காக்க' என்ற தலைப்பில் அன்புமணி உரையாற்றுகிறார். இந்நிகழ்ச்சியில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.