/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அன்புமணி அறிவிப்பு பா.ம.க., வினர் கொண்டாட்டம்
/
அன்புமணி அறிவிப்பு பா.ம.க., வினர் கொண்டாட்டம்
ADDED : ஏப் 14, 2025 06:22 AM

திண்டிவனம்: பா.ம.க.,வின் மாநில தலைவராக அன்புமணி அறிவிப்பு தொடர்ந்து திண்டிவனத்தில் அவரது ஆதரவாளர்கள் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
பா.ம.க., மாநில தலைவராக இருந்து வந்த அன்புமணி, அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு, செயல்தலைவரக செயல்படுவார் என்று கட்சியின் நிறுவனர் ராமதாஸ், கடந்த 10ம் தேதி தைலாபுரத்தில் அறிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக, பா.ம.க., தலைவரை கட்சியின் பொதுக்குழு மூலம் கடந்த 2022ல் தேர்வு செய்யப்பட்டதாலும், இதை தேர்தல்ஆணையம் அங்கீகரித்து உள்ளதால், பா.ம.க., தலைவராக நான்(அன்புமணி) உள்ளேன் என்று அன்புமணி நேற்று அறிவித்தார்.
இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திண்டிவனம் தாலுகா அலுவலகம் எதிரில் நேற்று காலை 10.30 மணிக்கு திண்டிவனம் பா.ம.க., முன்னாள் நகர செயலாளர் ராஜேஷ் தலைமையில் நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

