/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் அன்புமணி நடைபயணம்
/
விழுப்புரத்தில் அன்புமணி நடைபயணம்
ADDED : ஆக 14, 2025 11:42 PM

விழுப்புரம்: பா.ம.க., தலைவர் அன்புமணி தலைமையில் மக்கள் உரிமை மீட்பு நடை பயணம் நடந்தது.
விழுப்புரத்தில் பா.ம.க., சார்பில் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நேற்று இரவு நடந்தது. பா.ம.க., தலைவர் அன்புமணி, விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் தொடங்கி, நேருஜி சாலையில் காந்தி சிலை வரை, நடை பயணம் மேற்கொண்டார்.
இதனையடுத்து காந்தி சிலை சந்திப்பில், நடைபயண விளக்க கூட்டம் நடந்தது. பா.ம.க., மாவட்ட செயலர் பாலசக்தி வரவேற்றார்.
பா.ம.க., பொதுச்செயலாளர் வடிவேல்ராவணன், தலைமை நிலையசெயலர் செல்வகுமார், மாநில செயலர் ஜெயராமன், வன்னியர் சங்க மாநில செயலர் வைத்தியநாதன், சிவக்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகித்தனர். பா.ம.க., தலைவர் அன்புமணி சிறப்புரையாற்றினார்.
மாவட்ட பொறுப்பாளர்கள் தர்மா, ஆறுமுகம், மாவட்ட தலைவர் தங்கஜோதி, அமைப்பு செயலாளர் பழனிவேல், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் அன்புமணி, ஓய்வுபெற்ற ஆசிரியர் செல்வகுமார், பகுஜன் சமாஜ் கட்சி கலியமூர்த்தி, புரட்சி பாரதம் மாவட்ட நிர்வாகி பூவைஆறு உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.
மாவட்ட துணை தலைவர் சம்பத், முன்னாள் நகர தலைவர் பெருமாள், ஒன்றிய செயலர்கள் ஞானவேல், முருகன், சக்தி, வைத்திலிங்கம், கோபாலகிருஷ்ணன், மணிமாறன், இளைஞரணி ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.