/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஓசை எழுப்பும் பழமையான குதிரை சிற்பங்கள்; பாதுகாக்க கோரிக்கை
/
ஓசை எழுப்பும் பழமையான குதிரை சிற்பங்கள்; பாதுகாக்க கோரிக்கை
ஓசை எழுப்பும் பழமையான குதிரை சிற்பங்கள்; பாதுகாக்க கோரிக்கை
ஓசை எழுப்பும் பழமையான குதிரை சிற்பங்கள்; பாதுகாக்க கோரிக்கை
ADDED : செப் 09, 2025 03:41 AM

விழுப்புரம் : சேந்தமங்கலத்தில் பழமை வாய்ந்த ஓசை எழுப்பும் குதிரை சிற்பங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அருகே உள்ள சேந்தமங்கலம் குளக்கரையில், பழமை வாய்ந்த இரண்டு குதிரை சிற்பங்கள் உள்ளன. இந்த சிற்பங்களை தட்டினால் பல விதமாகன ஓசைகள் வரும் சிறப்பு வாய்ந்தது. மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த சிற்பங்களை, பா.ஜ., மாநில செயலாளர் அஸ்வத்தாமன், விழுப்புரம் வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் உள்ளிட்ட குழுவினர் நேரில் பார்வையிட்டனர்.
இது குறித்து ஆய்வாளர் செங்குட்டுவன் கூறியதாவது; இந்த குதிரை சிற்பங்கள் சுமார் 800 ஆண்டுகள் பழமையானது. விதவிதமான ஓசைகளை தரும் வகையில், அரிய கற்களைக்கொண்டு நுட்பமாக வடிக்கப்பட்டுள்ளது.
தமிழக கோவில்களில் உள்ள இசைக்கும் துாண்கள், இசைக்கும் படிக்கட்டுகள் போன்று, இந்த ஓசை தரும் சிற்பங்களும் சிறப்பு வாய்ந்தவை.
சேந்தமங்கலத்தை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த காடவ மன்னர்களின் இசை ஆர்வத்திற்கு கலைநயம் மிக்க இந்த சிற்பங்களே சான்று. சேந்தமங்கலம் ஆபத்சகாயேஸ்வரர் கோ விலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் எளிதில் வந்து பார்க்கும் சூழலில் இந்த சிற்பங்கள் இல்லை. புதர்கள் மண்டி அசுத்தமான சூழலில் கிடக்கிறது.
இதனை உரிய முறையில் பாதுகாத்து, பொது மக்கள் எளிதில் வந்து பார்க்கும் வகையில் மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.