/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெண்ணிடம் ரூ.3 லட்சம் கொள்ளையடித்த வழக்கு ஆந்திரா ஆசாமி கைது
/
பெண்ணிடம் ரூ.3 லட்சம் கொள்ளையடித்த வழக்கு ஆந்திரா ஆசாமி கைது
பெண்ணிடம் ரூ.3 லட்சம் கொள்ளையடித்த வழக்கு ஆந்திரா ஆசாமி கைது
பெண்ணிடம் ரூ.3 லட்சம் கொள்ளையடித்த வழக்கு ஆந்திரா ஆசாமி கைது
ADDED : செப் 28, 2024 05:06 AM

திண்டிவனம்: திண்டிவனத்தில் பைக்கில் வைத்திருந்த 3 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த வழக்கில் ஆந்திராவைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம், ஆர்.எஸ்.பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் தயாளன் மனைவி விமலா, 45. இவர் கடந்த மாதம் 23ம் தேதி நேரு வீதியில் உள்ள வங்கியில் இருந்து கடன் மூலம் பெற்ற 3 லட்சம் ரூபாயை தனது ஸ்கூட்டரின் சீட் அடியில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றார்.
வீட்டின் முன் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு மீண்டும் வெளியே வந்து பார்த்த போது, 3 லட்சம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது.
இதுகுறித்து திண்டிவனம் டவுன் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தினர்.
அதில் 3 லட்சம் கொள்ளையடித்த நபர் பண்ருட்டியில் நடந்த திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு, பண்ருட்டி போலீசில் சிக்கி கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
சிறையில் இருந்த ஆந்திரா மாநிலம், ஓஜிகுப்பம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், 40; என்பவரை திண்டிவனம் போலீசார் கோர்ட் மூலம் கஸ்டடி எடுத்து விசாரணை நடத்தி 2 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
அதனைத்தொடர்ந்து, வெங்கடேசனை மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.