/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வளவனுாரில் அங்காள பரமேஸ்வரி அம்மன் தேரோட்டம்
/
வளவனுாரில் அங்காள பரமேஸ்வரி அம்மன் தேரோட்டம்
ADDED : மார் 14, 2024 11:24 PM

விழுப்புரம்: வளவனுார் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது.
இக்கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை மற்றும் இரவு வீதியுலா நடந்தது. நேற்று 14ம் தேதி தேரோட்டம் நடந்தது.
அதனையொட்டி, காலை 1100 மணிக்கு அங்காளம்மனுக்கு அபிஷே, ஆராதனை நடந்தது.
தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பிற்பகல் 3:00 மணிக்கு, தங்கக் கவசத்தில் அங்காளம்மன் திருத்தேரில் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
கோவில் தர்மகர்த்தா கலிவரதன் தலைமையில் அறங்காவலர் குழுவினர், வளவனுார் குமாரபுரி மக்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

