/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்
/
அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்
ADDED : ஜூலை 02, 2025 11:54 PM

செஞ்சி : செஞ்சி, பீரங்கிமேடு அபித குஜாம்பாள் சமேத அருணாச்சலேஸ்வரர் கோவிலில் திருமறைக்கழகம் சார்பில் நேற்று ஆனி திருமஞ்சனம் நடந்தது.
இதையொட்டி, அதிகாலை 4:00 மணிக்கு சிவகாமசுந்தரி உடனுறை நடராஜப் பெருமானுக்கும், மாணிக்கவாசகருக்கும் மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர், வெட்டிவேர் உள்ளிட்ட விசேஷ திரவியங்களை கொண்டு திருமஞ்சனம் செய்தனர்.
தொடர்ந்து 8:00 மணிக்கு மகா அலங்காரமும், மகா தீபாராதனையும் நடந்தது. பக்தர்கள் திருவாசக பாடல்களை பாடியபடி, கோலாட்டம், கைலாய வாத்தியங்கள் முழங்க சாமி கோவில் உலா நடந்தது.
திருமறைகழக நிர்வாகிகள், கோவில் நிர்வாகிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.