/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் மண் சரிவால் ஆஞ்சநேயர் சிலைக்கு பாதிப்பு
/
விழுப்புரத்தில் மண் சரிவால் ஆஞ்சநேயர் சிலைக்கு பாதிப்பு
விழுப்புரத்தில் மண் சரிவால் ஆஞ்சநேயர் சிலைக்கு பாதிப்பு
விழுப்புரத்தில் மண் சரிவால் ஆஞ்சநேயர் சிலைக்கு பாதிப்பு
ADDED : டிச 03, 2024 06:52 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் உள்ள பிரமாண்ட ஆஞ்சநேயர் சிலை அருகே மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள கோரிக்கை எழுந்துள்ளது.
விழுப்புரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலின் பின் பகுதியில், கோவில் குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தின் பின் பகுதியில் 90 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டு கம்பீரமாக காட்சி தருகிறது. ஆண்டு தோறும் லட்சதீப விழாவின்போது, இந்த பிரமாண்ட ஆஞ்சநேயர் சிலைக்கு பால் அபிஷேகம் நடப்பதும், ஆயிரக்கணக்கான பக்தர்களும் தரிசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த பிரமாண்ட ஆஞ்சநேயர் சிலையின் கீழ்பகுதி பீடத்தின் அருகே தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக மண் சரிவு ஏற்பட்டு, சிலையை பாதிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
மூன்று நாள் தொடர் கனமழையால், கோவில் குளம் தண்ணீர் நிரம்பி வருகிறது. இதனால், கோவில் குளத்தின் பின் பகுதி சுற்றுசுவர் நேற்று உடைந்து சரிந்து விழுந்துள்ளது. பிரமாண்ட ஆஞ்சநேயர் சிலையின் அடியில் உள்ள பீடத்தின் அருகே இந்த மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், சிலையை தாங்கி பிடிக்கும் பீடம் சரிந்து, அதனால் சிலையும் சாயும் அச்ச நிலை உள்ளதாகவும், அரசு தரப்பில் உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த இந்த பிரமாண்ட சிலை நிறுவனரான விழுப்புரத்தை சேர்ந்த தனசு உள்ளிட்டோர், நேற்று காலை அந்த பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு, மண் சரிவு ஏற்படாத வகையில் தற்காலிகமாக தடுப்பு அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.