/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அண்ணா பல்கலை ஆசிரியர் சங்கத்தினர் போராட்டம்
/
அண்ணா பல்கலை ஆசிரியர் சங்கத்தினர் போராட்டம்
ADDED : டிச 06, 2025 07:00 AM

திண்டிவனம்: அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கையை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினர்.
திண்டிவனத்தில் உள்ள அண்ணா பல்லைக்கழக வளாகத்தில், நேற்று காலை 9:30 மணியளவில், தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பில் ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில், பதவி உயர்வு வழங்க வேண்டும். பதவி உயர்விற்கான ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும். அனைத்து ஓய்வூதிய சலுகைகளும் ஒரு மாதத்திற்குள் தீர்க்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 10 நிமிட போராட்டத்திற்குப்பின் அனைவரும் மீண்டும் பணிக்கு திரும்பினர்.
விழுப்புரம் விழுப்புரம் அரசு பொறியியல் கல்லுாரியில் நடந்த போராட்டத்திற்கு, சங்க தலைவர் நெடுஞ்செழியன் தலைமையில், செயலாளர் வேல்முருகன் உள்ளிட்ட ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பங்கேற்றனர். அண்ணா பல்கலைக்கழகத்தின், அனைத்து வளாகங்களிலும் உள்ள ஆசிரியர்களின், பதவி உயர்வு, உயர்கல்வி வழிகாட்டுதலில் சுழற்சி முறை பணிகள், ஊதிய உயர்வு முரண்பாடுகள் கலைய வேண்டும் உள்ளிட்ட நீண்டகால கோரிக்கைகள், பிரச்னைகள் தீர்க்க, பல்கலைக் கழக நிர்வாகம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.

