/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விக்கிரவாண்டி தொகுதியில் 2 புதிய துணை மின் நிலையம் அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., கோரிக்கை

ADDED : மார் 21, 2025 04:47 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதியில் 2 புதிய துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்தார்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் கேள்வி பதில் நேரத்தின் போது அவர் பேசியதாவது:
விக்கிரவாண்டி தொகுதி விவசாயிகள் நிறைந்த பகுதியாகும். அங்கு முன்முனை மின்சாரம் குறைந்த அளவே வருவதால் விவசாயிகள் மோட்டார் இயக்க சிரமப்படுகிறார்கள்.
எனவே, விக்கிரவாண்டி தொகுதியில் கானைகுப்பம், பனமலைப்பேட்டை ஆகிய இரு இடங்களில் துணை மின் நிலையங்கள் அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. துணை மின் நிலையம் 2 இடங்களிலும் அமைக்க அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
இதற்கு பதில் அளித்து மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், 'ஏற்கனவே அறிவிக்கப்பட்ட துணை மின் நிலையங்கள் படிப்படியாக எடுத்துக்கொள்ளப்பட்டு அதற்கான பணிகள் துவங்கியுள்ளன. எம் .எல். ஏ., கேட்டுக் கொண்ட படி தேவையை கருத்தில் கொண்டு முன்னுரிமை வழங்கி அமைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.