ADDED : மார் 25, 2025 04:23 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த தொரவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
விழாவிற்கு அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் சங்கர், பள்ளி மேலாண்மைக் குழு தேன்மொழி, நகாய் ரகுராமன், முன்னாள் மாணவர் சாம்பசிவம் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் செல்லையா வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார்.
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 80 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி வினா போட்டியில் வென்ற மாணவர்களுக்கு முன்னாள் எம்.பி., கவுதம சிகாமணி, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை, துணை சேர்மன் ஜீவிதா ரவி ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர்.
ஒன்றிய செயலாளர்கள் ரவிதுரை, வேம்பி ரவி, ஜெயபால், மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன், கண்காணிப்பு குழு எத்திராசன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் பாரதி ,தொழில்நுட்ப அணி கபிலன், பள்ளி ஆசிரியர்கள் எட்வர்டு ஜான்சன், நாகராணி, அன்பரசு, சந்திரா, அருளரசி, புஷ்பவள்ளி, பெமினா, புனிதா, சுகன்யா, சூர்யகலா, சங்கரி உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியை அருளரசி நன்றி கூறினார்.