நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தானங்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
விழாவிற்கு பள்ளி மேலாண்மைக் குழு தலைவி விஜயலட்சுமி தலைமை தாங்கினார். ஊராட்சி உறுப்பினர் பழனி, தொழிலதிபர் பால் பாண்டியன் ரமேஷ், முன்னாள் ஆசிரியர் டில்லி பாபு முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் ராதா வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர்கள் ரவிச்சந்திரன், கிருஷ்ணன், அருணா வாழ்த்திப் பேசினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.