/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வானுார் அரசு கல்லூரி மாணவர் சேர்க்கை ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவிப்பு

ADDED : மே 13, 2025 01:02 AM
வானுார் : வானூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி முதல்வர் வில்லியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு
வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழக அரசின் வழிகாட்டுதலின் படி, ஆன்லைனில் விண்ணப்பிக்க உதவி மையம் வரும் 27 ம் தேதி வரை செயல்படுகிறது. இந்த கல்லூரியில் பி.ஏ., பாடப்பிரிவில் தமிழ், ஆங்கிலம், பி.எஸ்.சி., பாடப்பிரிவில் கணிதம், கணினி அறிவியல் மற்றும் பி.காம் வணிகவியல் பாடப்பிரிவுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த கல்வியாண்டு முதல் சுழற்சி முறையில், பி.எஸ்.சி., அறிவியல் பாடப்பிரிவில், தாவரவியல் பாடப்பிரிவும், சுழற்சி இரண்டில் கணினி அறிவியல், வணிகவியல் பாடப்பிரிவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்லூரியில் துவங்கப்பட்டுள்ள இந்த உதவி மையத்தை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.