sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் கொள்முதல் நிறுத்த அறிவிப்பால் பரபரப்பு; அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்குப்பின் வியாபாரிகள் சமரசம்

/

செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் கொள்முதல் நிறுத்த அறிவிப்பால் பரபரப்பு; அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்குப்பின் வியாபாரிகள் சமரசம்

செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் கொள்முதல் நிறுத்த அறிவிப்பால் பரபரப்பு; அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்குப்பின் வியாபாரிகள் சமரசம்

செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் கொள்முதல் நிறுத்த அறிவிப்பால் பரபரப்பு; அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்குப்பின் வியாபாரிகள் சமரசம்


UPDATED : ஜன 09, 2026 02:21 PM

ADDED : ஜன 09, 2026 05:44 AM

Google News

UPDATED : ஜன 09, 2026 02:21 PM ADDED : ஜன 09, 2026 05:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் சீசன் துவங்க உள்ள நிலையில் ஆட்குறைப்பு செய்ததை கண்டித்து நேற்று கொள்முதல் நிறுத்தம் செய்யப்போவதாக வியாபாரிகள் அறிவித்ததைத் தொடர்ந்து பரபரப்பு நிலவியது. அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையால் தற்காலிகமாக ஒத்தி வைத்தனர். தமிழகம் முழுதும் மார்க்கெட் கமிட்டிகளில் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை ஆணையர் மேற்கொண்டுள்ளார். இதில், செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் தற்காலிக பணியில் ஈடுபட்டு வந்த 6 கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்கள், பகுப்பாய்வாளர் ஒருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நெல் வரத்து சீசன் துவங்கி உள்ள நிலையில் ஆட்குறைப்பினால் விளை பொருட்களை பதிவு செய்யும் கேட் என்ட்ரி, நெல் தரம் பார்க்கும் பணி, ஏலத்தொகை கம்ப்யூட்டரில் பதிவு செய்வது, ஏலம் நடத்துவது, விவசாயிகளுக்கு விலைப்பட்டியல் வெளியிடுவது, எடை போடும் பணி, வங்கி கணக்குகளை பதிவேற்றம் செய்வது, விவசாயிகளுக்கு பணத்தை வங்கிகள் மூலம் மாற்றம் செய்வது உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் முழு அளவில் விளை பொருட்களை கொள்முதல் செய்ய முடியாத நிலையும், வியாபாரிகள், தொழிலாளர்களிடையே பிரச்னையும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று முதல் நெல் கொள்முதல் செய்வதை நிறுத்துவதாக வியாபாரிகள் அறிவித்திருந்தனர்.

இது குறித்த ஆலோசனைக் கூட்டம் கமிட்டி அலுவலகத்தில் நடந்தது. சங்க தலைவர் துரைகுமார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் செயலாளர் சங்கர், பொருளார் மூர்த்தி, கவுரவத்தலைவர் குமரேசன், ஆலோசகர் பாண்டியன், இணை செயலாளர் சண்முகம், வேர்க்கடலைவியாபாரிகள் சங்கம் செல்வம் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர். இதனால், கமிட்டியில் பரபரப்பு நிலவியது.

கூட்டம் முடிந்த பின் மார்க்கெட் கமிட்டி கண்காணிப்பாளர் வினோத்குமார் தலைமையில் பேச்சு வார்த்தை நடந்தது.

அப்போது வியாபாரிகள் தரப்பில் இ-நாம் ஆப் குறிப்பிட்ட நேரத்தில் ஓபன் ஆகாமல் இருப்பதை சரி செய்ய வேண்டும். கேட் என்ட்ரி குறிப்பிட்ட நேரத்திற்குள் பதிவு செய்ய வேண்டும். மொபைல் போனில் ஐந்து லாட்டுக்கு மேல் விலை குறிப்பிட முடியாமல் இருப்பதை உயர்த்த வேண்டும்.

கமிட்டி வளாகத்தில் அதிவேக இணையதள சேவை கிடைக்கச் செய்ய வேண்டும். இ-நாம் முறையில் உள்ள பிரச்னைகளை உடனே சரி செய்ய வேண்டும். வியாபாரிகளுக்கு அனுபவம் குறைவாக இருப்பதால் கம்ப்யூட்டரில் பதிவு செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்த கூடாது.

விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தும் தொகை பிற நில நபர்களுக்கு சென்று விடுவதை தடுக்க வேண்டும். இ-நாம் போர்டலில் திருத்தங்களை செய்ய வேண்டும். சீசன் துவங்கியுள்ள நிலையில் ஆட்குறைப்பு செய்யாமல் கூடுதல் பணியாளர்களை அமர்த்த வேண்டும். மின்சாரம், குடிநீர் மற்றும் அடைப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும், இதுகுறித்து மனுவும் அளிக்கப்பட்டது.

கோரிக்கைகளை ஒரு மாதத்தில் நிறைவேற்றவும், சீசன் முடியும் வரை பணி நீக்கம் செய்யப்பட்ட கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்களை மீண்டும் பணியில் அமர்த்தவும் கண்காணிப்பாளர் வினோத்குமார் உறுதியளித்தார். இதையடுத்து வியாபாரிகள் வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக அறிவித்தனர்.






      Dinamalar
      Follow us