ADDED : பிப் 18, 2024 05:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
ஊராட்சி தலைவி காந்தரூபி தலைமை தாங்கினார். ஊராட்சி துணைத் தலைவர் கலா, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி தலைமை ஆசிரியை உமா வரவேற் றார். ஆசிரியை சந்திரலேகா ஆண்டறிக்கை வாசித்தார்.
விழாவில், பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வட்டார கல்வி அலுவலர்கள் ஜெயசங்கர், கவிதா ஆகியோர் பரிசு வழங்கினர்.
கல்விக்குழு கிருஷ்ணமூர்த்தி, பள்ளி ஆசிரியர்கள் சசிகலா, தெய்வசிகாமணி, தரணி, கமலக்கண்ணன், ஷகிலா, கிராம முக்கியஸ்தர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பங்கேற்றனர் ஆசிரியை செல்வி நன்றி கூறினார்.