/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வேளாண் அறிவியல் நிலையத்தில் வருடாந்திர விதைத் திருவிழா
/
வேளாண் அறிவியல் நிலையத்தில் வருடாந்திர விதைத் திருவிழா
வேளாண் அறிவியல் நிலையத்தில் வருடாந்திர விதைத் திருவிழா
வேளாண் அறிவியல் நிலையத்தில் வருடாந்திர விதைத் திருவிழா
ADDED : டிச 01, 2025 05:39 AM

திண்டிவனம்: திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலையத்தில் வருடாந்திர விதைத் திருவிழா நடந்தது.
விழாவை, கோயம்புத்துாரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் விதை மைய இயக்குநர் உமாராணி துவக்கி வைத்து பேசினார். திட்ட ஒருங்கிணைப்பாளர் திருவரசன் வரவேற்றார்.
மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சீனிவாசன் விதை திருவிழாவின் முக்கியத்துவம் குறித்தும், வேளாண் துறையில் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள் குறித்து பேசினார்.
ராஜா, கதிரவன் விதை நேர்த்தி செயல்விளக்கங்கள், விதை உற்பத்தி வணிகம் பற்றி கூறினர்.
விதை ஆய்வு துணை இயக்குநர் சரவணன் விதை தரக் கட்டுப்பாட்டிற்கான விதை சட்டங்களை பற்றியும், விதை ஆய்வு துணை இயக்குநர் பாபு, விதை சான்றளிப்பு முறைகள் பற்றி கூறினார். செபஸ்டியன், ஆனந்தி, ஜமுனா, கணபதி, செந்தமிழ் ஆகியோர் வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட செயல்பாடுகள் குறித்து பேசினர்.
நிகழ்ச்சியில் தொழில்நுட்ப கையேடு வெளியிடப்பட்டு, விவசாயிகளுக்கு விதை இடு பொருட்கள் வழங்கப்பட்டது. விழாவில், 60 பாரம்பரிய நெல் ரகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பட்டினை விஜயகீதா செய்திருந்தார்.

