/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
லாரி டிரைவரை தாக்கி பணம் பறிப்பு; குள்ளஞ்சாவடியில் மீண்டும் அட்டகாசம்

ADDED : ஏப் 14, 2025 06:35 AM
குள்ளஞ்சாவடி : குள்ளஞ்சாவடி அருகே லாரி டிரைவரை தாக்கி, பணம் பறித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த பெருமுக்கல் பகுதியை சேர்ந்தவர் ராஜி,38; லாரி டிரைவர். இவர், நேற்று முன்தினம் பெருமுக்கலில் இருந்து டிப்பர் லாரியில் ஜல்லி ஏற்றிக்கொண்டு கடலுர் அடுத்த குறிஞ்சிப்பாடி நோக்கி சென்றார்.
நேற்று அதிகாலை, குள்ளஞ்சாவடி அடுத்த பொன்னங்குப்பம் பகுதியில் சாலையோரம் லாரியை நிறுத்திவிட்டு, சாலையோர சவுக்கு தோப்பிற்கு இயற்கை உபாதைக்காக சென்றார். அப்போது, ராஜியை இருவர் வழிமறித்து தாக்கி, லாரிக்கு அழைத்து சென்று, அவரிமிருந்து 20 ஆயிரம் பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து ராஜி கொடுத்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு புதுச்சத்திரம் அருகே லாரி டிரைவர்களை குறி வைத்து பணம் பறித்த கொள்ளையனை போலீசார் என்கவுன்டர் செய்தது குறிப்பிடத்தக்கது.
லாரி டிரைவர்களை குறி வைத்து கொள்ளையடிக்கும் நபர்களால், வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.