ADDED : நவ 01, 2024 06:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை சார்பில் ஊழல் தடுப்பு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தாலுகா அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, தாசில்தார் கனிமொழி தலைமை தாங்கினார்.
விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி, சப் இன்ஸ்பெக்டர் சக்கரபாணி முன்னிலை வகித்தனர்.
டி.எஸ்.பி., அழகேசன் பேசுகையில், பொதுமக்கள் நம்மை நம்பி வரும் அளவில், நமது அரசு அலுவல் பணிகள் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்' என்றார்.
நிகழ்ச்சியில் ஆர்.ஐ.,க்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர்.