/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஊழல் தடுப்பு வார விழிப்புணர்வு பேரணி
/
ஊழல் தடுப்பு வார விழிப்புணர்வு பேரணி
ADDED : நவ 01, 2024 06:36 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் ஊழல் தடுப்பு வார மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியினை கலெக்டர் பழனி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பில், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தையொட்டி நடந்த ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் பழனி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பேரணியில் 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவி யர்கள் கலந்து கொண்டு, லஞ்சம் வாங்குவது குற்றம், லஞ்சம் கொடுப்பதும் குற்றம் உள்ளிட்ட ஊழல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இப்பேரணி, கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கி, விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு வரை சென்று நிறைவடைந்தது.
இந்நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி, லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி., அழகேசன், இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி, சப் இன்ஸ்பெக்டர் சக்கரபாணி, ஏட்டு மூர்த்தி உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.