ADDED : ஜூன் 26, 2025 11:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் அருகே கீழ்எடையாளத்தில் உள்ள ஜெ.ஆர்., மருத்துவக்கல்லுாரியில் சர்வதேச போதைப் பொருட்கள் எதிர்ப்பு தின ஊர்வலம் நடந்தது.
கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, மருத்துவக்கல்லூரி டீன் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
திண்டிவனம் மதுவிலக்கு மற்றும் அமலாக்கத்துறை இன்ஸ்பெக்டர் பாலமுரளி போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினார்.
மருத்துவ கண்காணிப்பாளர் காசிநாதன், துணை கண்காணிப்பாளர் வினோபாரதி, மனநல மருத்துவத்துறை டாக்டர்கள் விக்னேஷ், கமலக்கண்ணன், சூர்யகோவிந்த், நிர்மல்குமார், பேராசிரியர்யர்கள், கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.