/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவிதொகை பெற விண்ணப்பம் வரவேற்பு
/
மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவிதொகை பெற விண்ணப்பம் வரவேற்பு
மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவிதொகை பெற விண்ணப்பம் வரவேற்பு
மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவிதொகை பெற விண்ணப்பம் வரவேற்பு
ADDED : ஜன 24, 2025 06:42 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய அலுவலகத்தில் கடந்த 1ம் தேதி துவங்கும் காலாண்டிற்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாற்றுத்திறனாளி இளைஞர்களிடம் இருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கலெக்டர் பழனி வெளியிட்ட செய்திக்குறிப்பு :
பத்தாம் வகுப்பு (தோல்வி), தேர்ச்சி மற்றும் அதற்கு மேலான கல்வி தகுதிகளை பெற்றோர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து, பதிவை தொடர்ந்து புதுப்பித்து கடந்த டிச., 31ம் தேதி 5 ஆண்டுகள் நிறைவடைந்த பின், வேலையின்றி காத்துள்ள இளைஞர்கள், பதிந்து ஓராண்டு நிறைவடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு மூலம் உதவிதொகை வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மனுதாரர்கள் கடந்த டிச., 31ம் தேதியில் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். மற்ற இனத்தை சேர்ந்தோர் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். உதவி தொகை விண்ணப்ப படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள் தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை ஆதாரமாக காண்பித்து விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் விண்ணப்பங்களை அனைத்து அலுவலக பணி நாட்களிலும் இலவசமாக பெறலாம்.
இல்லையேல் https://employmentexchange.tn.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதில் பயன்பெறுவோரின் பதிவு ரத்து செய்யப்படாது. கடந்த 1ம் தேதி துவங்கும் காலாண்டிற்கான உதவிதொகை விண்ணப்பங்களை மனுதாரர்கள் வரும் பிப்., 28 ம் தேதி வரை அனைத்து பணி நாட்களிலும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் விழுப்புரத்தில் உள்ள வேலைவாய்ப்பற்றோர் உதவிதொகை திட்ட பிரிவில் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்தோடு நேரில் சமர்பிக்கலாம்.
வேலைவாய்ப்பற்ற அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கு காலாண்டிற்கு ஒரு முறை வழங்கப்படும் உதவிதொகையை சிறப்பு நேர்வாக மாதந்தோறும் வழங்குவதற்கு அரசால் அனுமதி வழங்கி ஆணையிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.