/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சாகசங்கள் புரிந்தோர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
/
சாகசங்கள் புரிந்தோர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
சாகசங்கள் புரிந்தோர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
சாகசங்கள் புரிந்தோர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : ஜூன் 28, 2025 01:09 AM
விழுப்புரம் : தேசிய அளவில் வீர தீர செயல்கள் மற்றும் சாகசங்கள் புரிவோருக்கான விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
தேசிய அளவில் வீர தீர செயல்கள் மற்றும் சாகசங்கள் புரியும் நபர்களை கவுரவிக்கும் விதத்தில், டென்சிங் நார்கே தேசிய சாகச விருது மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இவ்விருது, நிலத்தில் சாகசம் புரிதல், கடல் சாகசம் புரிதல், வான்வெளியில் சாகசம் புரியும் நடவடிக்கைகளுக்காக, தலா ஒரு விருது வழங்கப்பட உள்ளது. கூடுதலாக சாகச துறையில் வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட உள்ளது.
இதில், ராணுவம், கடற்படை, விமானப்படையில் பணியாற்றும் பணியாளர்களும் விண்ணப்பிக்கலாம்.
இவ்விருது, கடந்த 2022, 2023, 2024 ஆண்டுகளில் சாகசம் புரிந்தவர்களாக இருக்க வேண்டும். விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், (https://awards.gov.in) இணையதள மூலம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் அதன் புகைப்படங்களுடன் கூடிய முழு ஆவண விவரங்களை புத்தக வடிவில் தயார் செய்து, மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் நாளை மறுநாள் 30ம் தேதி மாலை 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, விளையாட்டு அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.