/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குழந்தைகள் பாதுகாப்பு அலகில் உதவியாளர், காவலர் பணியிடம் விண்ணப்பம் வரவேற்பு

ADDED : ஜூன் 28, 2025 12:51 AM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள ஒரு பெண் உதவியாளர், காவலர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்ட சமூக நலத்துறை வாயிலாக, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை மூலம், பெண் சிசு கொலையை தடுக்கவும், குப்பை தொட்டிகளில் நிராதரவாக விட்டுச் செல்வதை தடுக்கவும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் தொட்டில் குழந்தை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்ட அலகில் பணிபுரிய 1 பெண் உதவியாளர் மற்றும் 1 காவலர் பணியிடம் காலியாக உள்ளது. இதற்கு விண்ணப்பிப்போர், 8ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். மாத ஊதியம் 4500 ரூபாய் வழங்கப்படும். 42 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
இரு பணியிடமும் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்படும். உரிய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகிறது.
இதற்கான விண்ணப்ப படிவத்தினை, விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.