/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தொழிலாளர் நலவாரிய திட்டங்கள் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
/
தொழிலாளர் நலவாரிய திட்டங்கள் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
தொழிலாளர் நலவாரிய திட்டங்கள் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
தொழிலாளர் நலவாரிய திட்டங்கள் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : அக் 26, 2025 10:42 PM
விழுப்புரம்: தமிழ்நாடு தொழிலாளர் நலவாரிய நலத்திட்டங்களைப் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விழுப்புரம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மீனாட்சி செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு தொழிலாளர் நல நிதி திட்டத்தின்படி தொழிற்சாலை, கடைகள், போக்குவரத்து, உணவு, தோட்ட நிறுவனங்கள் போன்ற அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, ஆண்டு தோறும், தொழிலாளர்கள் பங்காக 20 ரூபாய், நிறுவனத்தின் பங்காக 40 ரூபாய் என 60 ரூபாய் கணக்கிட்டு, தொழிலாளர் நல நிதியினை வாரியத்திற்கு செலுத்த வேண்டும்.
அதன்படி, நடப்பாண்டுக்கான நிதியினை வரும் 2026 ஜனவரி 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
இவ்வாறு, தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் சார்ந்தவர்களுக்கு, வாரியத்தின் மூலம், கல்வி உதவித் தொகை (மழலையர் பள்ளி முதல் பட்டமேற்படிப்பு வரை), திருமணம், இயற்கை மரணம், விபத்து மரணம், ஈமச்சடங்கு, மூக்கு கண்ணாடி, புத்தக நிதியும், கல்வி ஊக்கத்தொகை, தையல் இயந்திரம், கம்ப்யூட்டர் பயிற்சி, உயர்கல்விக்கான நுழைவு தேர்வு உதவித்தொகை, மாவட்ட அளவிலான விளையாட்டு உதவித்தொகை போன்ற பல உதவித் தொகைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த உதவித் தொகை பெற, தொழிலாளர்களின் மாத ஊதியம் 35 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். கல்வி உதவித்தொகை கோரும் விண்ணப்பங்கள், நலவாரியத்திற்கு வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.
தொழிலாளர் நலவாரிய அலுவலகத்திலோ அல்லது www.lwb.tn.gov.in இணையத்தின் மூலமாகவோ விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியம் சென்னை-6 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

