/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குழந்தைகள் நலக்குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பம் வரவேற்பு
/
குழந்தைகள் நலக்குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பம் வரவேற்பு
குழந்தைகள் நலக்குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பம் வரவேற்பு
குழந்தைகள் நலக்குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பம் வரவேற்பு
ADDED : நவ 23, 2024 06:14 AM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிற்கு, இளைஞர் நீதி சட்டத்தின்படி, தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படுகிறார்கள். தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
குழந்தைகள் நலக்குழுவிற்கு, ஒரு பெண் உட்பட தலைவர் மற்றும் உறுப்பினர்கள், அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். இப்பதவி அரசு பணி அல்ல. விண்ணப்பதாரர்கள், குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம், சட்டம், சமூகப்பணி, சமூகவியல், மனித உடல் நலம், கல்வி, மனித மேம்பாடு, மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி, இவற்றில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்று, குறைந்தது 7 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்.
அல்லது குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சமூகப்பணி ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்று தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும். 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயதை பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவிகளுக்கான விண்ணப்பத்தினை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெறலாம். அல்லது dsdcpimms.tn.gov.in என்ற இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தகுதி வாய்ந்த நபர்கள், 15 நாட்களுக்குள், இயக்குனர், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை, எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ், சென்னை -600 010. என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.