/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
எழுத்தாளர்களுக்கு நிதியுதவி விண்ணப்பங்கள் வரவேற்பு
/
எழுத்தாளர்களுக்கு நிதியுதவி விண்ணப்பங்கள் வரவேற்பு
எழுத்தாளர்களுக்கு நிதியுதவி விண்ணப்பங்கள் வரவேற்பு
எழுத்தாளர்களுக்கு நிதியுதவி விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : அக் 31, 2025 02:32 AM
விழுப்புரம்:  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் எழுத்தாளர்களுக்கு நிதியுதவி வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டு சங்கம் மூலம்  2024-25ம் ஆண்டிற்கு 11 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் எழுத்தாளர்களின் படைப்புகளை தேர்வு செய்து, நிதியுதவி தொகை தலா ஒரு லட்சம் வழங்க ப்பட உள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகங்களிலும், ஆதி திராவிடர் நல ஆணையரகத்திலும் அரசு வேலை நாட்களில் நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், www.tn.gov.in அல்லது https://www.tn.gov.in/form இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வரும், நவ., 14ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

