/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க.,வில் பொறுப்புகள் விண்ணப்பம் வரவேற்பு
/
தி.மு.க.,வில் பொறுப்புகள் விண்ணப்பம் வரவேற்பு
ADDED : மே 10, 2025 12:48 AM
விழுப்புரம்: விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பு அணிகளில் காலியாக உள்ள பொறுப்புகளுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி அறிக்கை:
விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பு அணிகளில் காலியாக உள்ள மாவட்ட பொறுப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மாணவர் அணி மற்றும் பொறியாளர் அணி ஆகிய இரு அணிகளைத் தவிர்த்து மற்ற அணிகளில் காலியாக உள்ள மாவட்ட அமைப்பாளர்கள், தலைவர்கள், துணை அமைப்பாளர்கள், துணைத் தலைவர்கள் பொறுப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க விரும்புவோர் நாளை 11ம் தேதி, மறுநாள் 12ம் தேதி ஆகிய இரு தினங்களில் காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் உள்ள மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் விருப்ப மனுக்களைப் பெற்று பூர்த்தி செய்து, உறுப்பினர் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒன்று இணைத்து அளிக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.