/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புதிய காவலர்களுக்கு பணி நியமன ஆணை
/
புதிய காவலர்களுக்கு பணி நியமன ஆணை
ADDED : நவ 28, 2024 07:19 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பு வீரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம், இரண்டாம்நிலை காவலர்கள் மற்றும் சிறைத்துறை காவலர்கள் பணியிடங்களுக்கு, விழுப்புரம் மாவட்டத்திலிருந்து, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 34 காவலர்கள் மற்றும் உளுந்தூர்பேட்டை தமிழ்நாடு சிறப்பு காவல் படை 10ம் மையத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட 63 காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 33 பேர், என மொத்தம் 130 காவலர்களுக்கு, பணி நியமன ஆணை நேற்று வழங்கப்பட்டது.
விழுப்புரம் காவலர் சமுதாய கூடத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், விழுப்புரம் எஸ்.பி., தீபக்சிவாச் பங்கேற்று, புதிய காவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி, வாழ்த்து தெரிவித்தார். உளுந்தூர்பேட்டை சிறப்பு காவல்படை மையத்தின் கூடுதல் கமாண்டர் ரவி, மாவட்ட தீயணைப்பு அதிகாரி பாஸ்கரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.