UPDATED : ஜூன் 28, 2026 06:46 PM
ADDED : ஜூன் 28, 2026 06:21 PM
அ நிறம் | அளவு
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி நகர அ.தி.மு.க., செயலாளராக முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
விக்கிரவாண்டி நகர அ .தி.மு.க., செயலாளராக விக்கிரவாண்டி வீரன் கோவில் தெருவைச் சேர்ந்த முருகன் என்பவரை நியமனம் செய்து கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
முருகன் இதற்கு முன் வார்டு செயலாளர், ஓட்டுனர் அணி செயலாளர், ஜெ., பேரவை செயலாளர் பதவிகளை வகித்துள்ளார். இவர், நேற்று மாவட்ட செயலாளர் பசுபதியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
