/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பொதுதேர்வில் சாதித்த போலீசாரின் பிள்ளைகளுக்கு பாராட்டு விழா
/
பொதுதேர்வில் சாதித்த போலீசாரின் பிள்ளைகளுக்கு பாராட்டு விழா
பொதுதேர்வில் சாதித்த போலீசாரின் பிள்ளைகளுக்கு பாராட்டு விழா
பொதுதேர்வில் சாதித்த போலீசாரின் பிள்ளைகளுக்கு பாராட்டு விழா
ADDED : ஜூன் 25, 2025 02:32 AM

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், பொதுத் தேர்வில் 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற போலீசாரின் பிள்ளைகளுக்கு பாராட்டு விழா நடந்தது.
கடந்த பொதுத்தேர்வில் பத்தாம் வகுப்பில் போலீசாரின் பிள்ளைகள் 24 பேரும், பிளஸ் 2 தேர்வில் 18 பேரும் 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் எடுத்து சாதித்தனர்.
சாதனை படைத்த 42 மாணவ, மாணவியர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி, மாவட்ட காவல் துறை சார்பில், விழுப்புரம் காவலர் திருமண மண்டபத்தில் நடந்தது.
விழாவில் எஸ்.பி., சரவணன் தலைமை தாங்கி, மாணவர்களின் எதிர்கால நலன்கள் குறித்தும், கல்வி வளர்ச்சி, ஒழுக்கம், மேற்படிப்பின் அவசியம் குறித்தும் அறிவுரை வழங்கினார். மேலும், மாணவ, மாணவியர்களை பாராட்டி ஊக்கப் பரிசு வழங்கி, சால்வை அணிவித்து கவுரவித்தார்.
நிகழ்ச்சியில் விழுப்புரம் ஏ.எஸ்.பி., ரவீந்திரகுமார்குப்தா, டி.எஸ்.பி., பிரகாஷ், ஆடிட்டர் முரளி, பெற்றோர் மற்றும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.