ADDED : மே 04, 2025 04:09 AM

அ நிறம் | அளவு
திண்டிவனம் : விழுப்புரம் மாவட்ட செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா திண்டிவனத்தில் நடந்தது.
விழாவிற்கு, சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார். செயலாளர் குமரகுருபரன் வரவேற்றார்.
நிர்வாகிகள் முத்துக்குமாரசாமி சேகர், மகாலிங்கம் முன்னிலை வகித்தனர்.
புதிய நிர்வாகிகள் கவுரவிக்கப்பட்டனர். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் ரொக்கத்தொகை வழங்கி, சங்கத்தின் மாநில தலைவர் செல்வராஜ் பேசினார். மாவட்ட நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
பொருளாளர் விஸ்வநாதன் நன்றி கூறினார்.
