ADDED : ஜன 28, 2026 06:18 AM

செஞ்சி: கோவில் விழாவில் பொது பக்தர்களை ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபட்ட என்.எஸ்.எஸ்., மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி என்.எஸ்.எஸ். மாணவர்கள் ஆங்கில புத்தாண்டு அன்று செஞ்சி கோட்டை வீர ஆஞ்சநேயர் கோவிலில் நடந்த விழாவில் பொது மக்களை ஒழுங்கு படுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த மாணவர்களுக்கு ஆஞ்சநேயர் கோவில் வழிபாட்டு குழு சார்பில் பாராட்டு விழா நடந்தது.
தலைமையாசிரியர் ராமசாமி தலைமை தாங்கினார். பி.டி.ஏ., தலைவர் மாணிக்கம் முன்னிலை வகித்தார். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் ஏழுமலை வரவேற்றார்.
வழிபாட்டு குழு தலைவர் அரங்க ஏழுமலை மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
விழா குழுவினர் செல்வம், சரவணன், அனுக்குமார், பாபு, ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் பாலசுப்ரமணியன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

